``ஆக.8...'' அதே தேதி, அதே இடம்... சமந்தாவை ரிவெஞ்ச் எடுத்தாரா நாக சைதன்யா? ஹாட் டாப்பிக்கான சம்பவம்
நடிகர் நாக சைதன்யாவுக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகைக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக..
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா...தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருகிறார்....
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஏ மாய சேசாவே படத்தில் சமந்தாவுடன் நடித்த அவர், அவரையே காதலித்தும் வந்தார்..
பலரின் ஃபேவரைட் ஜோடியாக இருந்த இவர்கள், 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இருவரும் பிரியப் போவதாக இருவரும் அறிவித்திருந்தது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடித்ததே சமந்தா நாகசைதன்யாவின் பிரிவுக்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக பேசப்பட்டன.
இதற்கிடையில் பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சமந்தா, தனது இதயத்தில் இனி யாருக்கும் இடமில்லை எனக்கூற மற்றொரு புறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை நாகசைதன்யா காதலித்து வருவதாக செய்திகள் பரவின...
அதற்கேற்றார் போல், ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்வது, பல இடங்களில் ஜோடியாக சுற்றுவது என காதலை வளர்த்து வந்துள்ளனர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதாவும்....
நடிகை சமந்தாவோ, மையோசிடிஸ் பாதிப்பு என தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வந்தார்...
இந்நிலையில் நாக சைதன்யாவும், சோபிதாவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வபோது தகவல்கள் பரவி வந்த சூழலில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதுவும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்த அதே வீட்டில் நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
இதனை, தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் நாகார்ஜுனா, எல்லையற்ற காதல் கதை தொடங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.. இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் பரவி வருகிறது..
இருவரின் திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படும் நிலையில், திரைத்துறையில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது இந்த நிச்சயதார்த்த தகவல்..