மோகன்லால் எடுத்த பரபரப்பு முடிவு.. பூகம்பத்தில் சிக்கிய மல்லுவுட்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

x

மலையாள திரையுலகையே ஆட்டிப்படைத்து வருகிறது நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள்..

அதிலும் மிக மரியாதைக்குரிய நடிகர்களாக அறியப்பட்டவர்கள் மீதான பாலியல் புகார்கள், ஒட்டுமொத்த திரைத்துறையையுமே உலுக்கியுள்ளது.

அதில் கேரள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் சிக்கியது தான் பேரதிர்ச்சி..

கடந்த 2016ம் ஆண்டு, நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ரேகா சம்பத் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இது தொடர்பாக புகாரளித்திருந்தார்..

இந்த குற்றச்சாட்டின் பெயரில் நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் காவல்நிலைய போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உட்பட 7 பேர் மீது நடிகை மினி முனீர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சிறப்பு விசாரணைக்குழு, நடிகை மினி முனீரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இப்படி மலையாள திரைத்துறையே பரபரத்துக் கொண்டிருக்க, கேரள நடிகர் சங்க அமைப்பான அம்மா அமைப்பில் இருந்து அதன் தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாகிகள் பலர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்..

சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து ஒன்றரை மாதங்களே ஆகியுள்ள நிலையில், சங்கத்தின் செயற்குழுவில் இருந்து துணைத்தலைவர், பொருளாளர், துணை செயலாளர் என மொத்தம் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஆனால், இந்த ராஜினாமா நடவடிக்கை குறித்து மோகன்லால் கூறிய போது, செயற்குழுவில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்குழு உறுப்பினர்களாக இருந்த டொவினோ தாமஸ், ஜெகதீஷ், வினுமோகன், நாடோடிகள் பட நடிகை அனன்யா, சரயு ஆகியோர் பதவி விலக மறுத்ததாக கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மட்டும் பதவி விலகினால் போதும்..அனைவரும் பதவி விலக தேவையில்லை என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் மோகன் லால் மட்டும் ராஜினாமா செய்வது ஏற்புடையதல்ல, ஒட்டுமொத்த செயற்குழுவையும் கலைக்க வேண்டும் என மம்மூட்டி பரிந்துரைத்ததாகவும் மலையாள திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இன்னும் 2 மாதங்களில் புதிய நிர்வாகிகளுடன் அம்மா அமைப்பு உயிர்ப்பிக்கப்படும் என கூறப்படும் நிலையில், அடுத்ததாக ப்ரித்விராஜ், ஜெகதீஷ், ஆசிப் அலி உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மலையாள திரைத்துறையையே தலைகீழாக்கியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், இனி நேராமல் இருக்கும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கின்றனர் அம்மா அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள்...

அதேநேரம் நடிகர் முகேஷ் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் அது பொய்யான புகார் என்றும் சம்பந்தப்பட்ட நடிகை மினு முனீரும் அவரது கணவரும் தன்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார்கள் என கூறியிருக்கிறார் முகேஷ்.

னக்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்கொண்டு, நிரபராதி என தெளிவுபடுத்த சட்டரீதியாக தயாராக உள்ளதாக கூறியிருக்கிறார் முகேஷ்... இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும், விளக்கங்களும், நடவடிக்கைகளுமாக இருக்கிறது மலையாள திரையுலகம்..


Next Story

மேலும் செய்திகள்