நடிகைக்கு கழிவறையில் நடந்த கொடூரம்.. பிரபல நடிகருக்கு கட்டம் கட்டிய போலீஸ்.. மல்லுவுட்டின் மறுமுகம்
மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகளின் அறியாத கருப்பு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியது ஹேமா கமிட்டி அறிக்கை...
அட்ஜஸ்ட்மென்ட், காஸ்டிங் கவுச், மிரட்டல், இரவு நேரத்தில் அறை கதவை தட்டுவது என மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து வருவதாக போட்டுடைத்தது அந்த அறிக்கை..
அதே நேரத்தில் கண்ணியமான நடிகர்களாக கருதப்பட்ட பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு சர்ச்சைகளும் பெருகி வந்தன..
கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் தொடங்கி, கேரளா கலாசித்ரா அகாடமியின் சேர்மனாக இருந்த ரஞ்சித் உட்பட பலர் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு அடுக்கியிருந்தனர்.
அதில், நடிகை ஒருவர், நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ், நடிகர் ஜெயசூர்யா, இடவெலா பாபு, மணியன் பிள்ளை ராஜு, உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
இப்புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட நடிகையிடம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அவர் குற்றம்சாட்டிய ஏழு பேர் மீதும் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவில் அங்கம் வகிக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான அஜிதா பேகம், பூங்குழலி ஆகியோர் எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியில் அமைந்துள்ள நடிகையின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நடிகர் ஜெயசூர்யா, சம்பந்தப்பட்ட நடிகையை கழிவறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியதை தொடர்ந்து, ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவின் கொல்லம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகர் முகேஷ் மீது ஐபிசி பிரிவு 354, 509ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் நடிகர் ஜெயசூர்யா, இடவெலா பாபு, மணியன் பிள்ளை ராஜு, காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் சந்திர சேகரன் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதால், பரபரத்து வருகிறது மலையாள திரையுலகம்..