கொளுத்தி போட்ட பிரபல நடிகை.. திடீரென வெளியே வந்த மோகன்லால்.. பற்றி எரியும் ஓபன் ஸ்டேட்மெண்ட்

x

இந்தியாவையே பரபரப்பாக்கியுள்ளது மலையாள சினிமாவில் அடுத்தடுத்து எழுந்து வரும் பாலியல் புகார்கள்...

ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டு...சங்கத் தலைவர் மோகன்லால் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது...

அதிலும் நடிகை பார்வதி இதைக் கோழைத் தனமான முடிவு என்று காட்டம் காட்டியதுடன்...வரும் காலங்களிலாவது நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார்...

நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஹேமா கமிட்டியின் அறிக்கை மவுனம் காத்து வந்த மோகன்லால் முதன்முதலாக மவுனம் கலைத்துள்ளார்...

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்றும்...மலையாள சினிமா தகர்ந்து போவதைத் தான் விரும்பவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்...

"நான் எங்கயும் ஓடி ஒளியல...இங்கதான் இருக்கேன்...விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்... உடல்நிலை சரியில்லாததால மருத்துவ சிகிச்சைக்காக குஜராத்,பெங்களூரு, சென்னையில தங்க வேண்டிய சூழல் இருந்துச்சு...நான் எங்கேயும் ஓடப்போறதில்ல...மலையாள சினிமா தகர்ந்து போறத நான் விரும்பல..."

மேலும் மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கத்தை மட்டும் எப்படி குறைகூற முடியும் என கேள்வி கேட்ட மோகன்லால்...அம்மா சங்கம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்...

"ஹேமா கமிட்டி அறிக்கை பத்தி நான் மட்டுமோ...இல்ல அம்மா சங்கம் மட்டுமோ பதில் சொன்னா சரிவராது... ஒட்டுமொத்த மலையாள சினிமாவும் பதில் சொல்லணும்...நான் இருந்த காலத்துல எழுந்த குற்றச்சாட்டுங்கிறதால ஒட்டுமொத்தமா ராஜினாமா செஞ்சுருக்கோம்...அம்மா சங்கம் மேல அவதூறு பரப்ப வேணாம்...வயநாடு நிலச்சரிவப்போ அம்மா சங்கம் பல உதவிகள செஞ்சுருக்கு...இது சினிமா தொழில் துறையையே அழிக்கக் கூடிய விஷயம்... மலையாள சினிமாவ நல்ல நிலைக்குக் கொண்டுவர நிறைய உழைச்சுருக்கோம்..."

இதற்குப் பின்னால் ஒரு சக்தி வாய்ந்த குழு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்...அப்படி எதுவும் தனக்குத் தெரியாது என்றும்...அதில் தான் ஒரு அங்கம் இல்லை எனவும் தெரிவித்த மோகன்லால்...

நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழலில் இதுகுறித்து தான் எப்படி பேச முடியும் என கேள்வி எழுப்பியதுடன்...கொஞ்சம் பொறுங்கள் எல்லாவற்றிற்கும் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்...

பாலியல் புகார்கள்...சர்ச்சைகள்...ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மோகன்லால் வெளிப்படையாக அன்றி பட்டும் படாமல் மட்டும் பேசியுள்ளது விவகாரத்தை தீவிரமாக்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்