27ம் தேதி "மெய்யழகன்" ரிலீஸ் = படத்தின் டீசர் வெளியீடு...

x

96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கும் மெய்யழகன் படத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மெய்யழகன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோரின் உரையாடல் கொண்ட இந்த டீசர், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்