ஓடிடியிலும் கவனத்தை ஈர்த்த 'மகாராஜா'

x

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம், ஓடிடியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இந்நிலையில், கடந்த மாதம் 12-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மகாராஜா திரைப்படம் வெளியானது. இப்படம் ஓடிடியில் வெளியாகி ஒரு மாதம் கடந்த பின்பும் கூட தற்போது வரை நெட்ஃப்லிக்ஸின் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. குறிப்பாக, வடமாநில ரசிகர்கள் மகாராஜா திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் நேர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்