இந்தியன் 2வில் அனுமதியின்றி பயன்படுத்திய முத்திரை?"ராஜேந்திரனுக்கும் இந்தியன் 2க்கும் சம்பந்தமில்லை"
மதுரையை சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் என்பவர், இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது தன்னிடம் ஆலோசித்து முத்திரை பயன்படுத்தப்பட்டதாகவும், இரண்டாம் பாகத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் தரப்பு மற்றும் இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், படக்குழு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.
Next Story