தீயாய் பரவிய தகவல்.. முற்றுப்புள்ளி வைத்த லைகா

x

முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், புதிய படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் லைகா நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரங்கள் வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பான ஏஜென்சி மற்றும் நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களது நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் நடிகர் தேர்வுக்கான விளம்பரங்கள், தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமே அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்