#JUSTIN || நில மோசடி புகார் - விசாரணைக்கு வந்தார் நடிகை கெளதமி

x

திரைப்பட நடிகை கௌதமி நில மோசடி வழக்கு சம்பந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜரானார்.

திரைப்பட நடிகை கௌதமி தன்னுடைய சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி

நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

அதன்படி கௌதமி தொடர்பான நில மோசடி வழக்குகள் பல்வேறு இடங்களில் தீவிர படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கோட்டையூர் பகுதியில் இருந்த நிலம் மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அழகப்பன் என்பவர் மீதும் அவரது மனைவி நாச்சால், மகள் ஆர்த்தி மற்றும் பாஸ்கரன் சதீஷ்குமார் ரமேஷ் சங்கர் ஆகிய ஆறு மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் 6பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும் வழக்கு விபரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நடிகை கௌதமிக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகை கௌதமி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் அழைப்பை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜரானார்.

கௌதமியுடன் அவரது சகோதரியும் மற்றும் வழக்கறிஞரும் வந்திருந்தனர்.

இந்நிலையில் நடிகை கௌதமி வந்திருப்பது குறித்து அறிந்து செய்தியாளர்கள் சென்றவுடன் உடனடியாக திரைப்பட நடிகை கௌதமி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட்டு விரைவாக சென்று விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்