லால் சலாம் ரிலீஸ் எப்போது..! வெளியான அசத்தல் அப்டேட்

x

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'லால் சலாம்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் 'லால் சலாம்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்