பிரபல நடிகர் மீது எழுந்த பாலியல் புகார்கள் - ஒரு முடிவோடு காத்திருக்கும் போலீஸ்
நடிகர் முகேஷ் கைதுக்கான தடை நாளையுடன் முடியும் நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, முன்ஜாமின் கோரில் நடிகர் முகேஷ், கொச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை, வரும் 2-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. முன்ஜாமின் மனுமீது நாளை மீண்டும் விசாரணை நடைபெற உள்ள நிலையில், முகேஷுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என வாதங்களை முன் வைக்க கேரள போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஜாமின் வழங்கினால், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என வாதங்களை முன் வைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.