பிரபல நடிகை கடத்தல்.. சூட்சுமத்தை அவிழ்த்த போலீஸ்.. தலைசுற்ற வைக்கும் ரிப்போர்ட்
கேரள மாநிலம் கொச்சியில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில், கடந்த 2017-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2020-ஆம் ஆண்டு விசாரணை தொடங்கியது. சுமார் நான்கரை ஆண்டுகள் நடந்த இந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. இவ்வழக்கை 100 நாட்கள் விசாரித்த காவல் துறை அதிகாரி பைஜூ பவுலஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பின் முழு விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கில் 261 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 600 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதிகள் தங்கள் வாதத்தை முன்வைக்க, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மலையாள நடிகர் திலீப் எட்டாவது பிரதியாக சேர்க்கப்பட்டு கைதான நிலையில், ஜாமினில் வெளிவிடப்பட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்டபின் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம் வர்கீஸ், வரும் நவம்பர் மாதத்தில் வழக்கின் தீர்ப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் சர்ச்சைகள் அதிகரித்துள்ள சூழலில், நடிகை கடத்தல் வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.