தனது தீவிர ரசிகனை சித்திரவதை செய்து கொன்று பூஜை நடத்திய நடிகர்.. திரையுலகையே அதிரவைத்த கொடூரம்
தனது தீவிர ரசிகனை சித்திரவதை
செய்து கொன்று பூஜை நடத்திய நடிகர்
திரையுலகையே அதிரவைத்த கொடூரம்
ரசிகரை கொன்ற வழக்கில், கைதாகியுள்ள கன்னட நடிகர் தர்ஷன், தடயங்களை அழிக்க லட்சக்கணக்கில் பணம் செலவழித்தது அம்பலமாகியுள்ளது.
கன்னட திரையுலகில் யாரும் எதிர்பாராத வகையில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிக்கியது தான்..
தனது காதலி பவித்ரா கவுடாவிற்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதால்..தனது தீவிர ரசிகரான ரேணுகா சாமியை சித்ரவதை செய்து கொன்றதால் ஹீரோவாக நடித்த நடிகர் தர்ஷன் நிஜ வாழ்க்கையில் வில்லன் ஆனார்..
இந்நிலையில், நடிகர் தர்ஷன் மட்டுமன்றி அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் கூட்டாளிகள் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது...
சாதாரண மருந்து கடையில் வேலை பார்க்கும் ரேணுகாசாமியை சித்ரவதை செய்து நடிகர் தர்ஷன் கொன்றதாக கூறப்படும் நிலையில், இக்கொலைக்கான தடயங்களை அழிக்க தனது நெருங்கிய நண்பரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் கடன் பெற்று கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளார்..
கொலை வழக்கில் இருந்து தப்ப 4 பேரை போலீசில் சரண் அடைய செய்ய திட்டமிட்ட அவர், சரணடைந்தவர்களுக்கென தனியாக 30 லட்சம் கொடுத்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இப்படி ஒரு கொலையை மறைக்க 70 லட்சம் வரை செலவழித்துள்ள நிலையில், தர்ஷன் மீது வருவாய்த்துறையினர் நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
இந்நிலையில், இந்த கொலைக்கு தர்ஷனின் மனைவியும் உடந்தையாக இருந்தாரா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
காரணம் கொலை சம்பவத்திற்கு பிறகு தனது மனைவி விஜயலட்சுமி வீட்டிற்கு சென்ற தர்ஷன், அங்கு பூஜை நடத்தியதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரது மனைவி இல்லத்தில் இருந்து அவரது காலணியை போலீசார் மீட்டுள்ளனர்..
இதனால் ரேணுகாசாமி கொலை குறித்து அவரது மனைவி விஜயலட்சுமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது..
இவ்வழக்கில் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி விசாரணை வளையத்திற்குள் வந்த நிலையில், அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள் கன்னட திரையுலகை உலுக்கி வருகிறது..