கமல்ஹாசனுக்கு குவிந்த வாழ்த்து மழை | kamal haasan

x

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த ட்விட்டர் பதிவில், "பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்... உங்களது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த ட்விட்டர் பதிவில், "பாசிச எதிர்ப்பிலும் - முற்போக்கு அரசியலிலும் என்றும் உறுதியுடன் பயணிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மகிழ்ந்தேன்... அவருடைய பணிகள் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்