`விஷ சாராய விவகாரம்' - அடுத்தடுத்து கொந்தளிக்கும் நடிகர்கள் - பற்றி எரியும் இணையம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்திற்கு நடிகர்கள் விஷால் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஷால் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில் நியாயப்படுத்த முடியாத இது பெருங்குற்றம் என்றும், இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story