வசூலை வாரிக் குவித்து வரும் "கல்கி 2898 ஏ.டி"

x

பாக்ஸ் ஆஃபீஸ் நாயகனாக மாறிய பிரபாஸுக்கு பாகுபலிக்குப் பிறகு வந்த படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை...

சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் என அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த போதும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றன...

பிரபாசின் கெரியரே முடிந்து விட்டது என்று ஒருசிலர் கூறிக் கொண்டிருக்க, அந்த ஏச்சு பேச்சுக்களையெல்லாம் முறியடிக்கும் வகையில் பிரபாஸை க் கைகொடுத்துத் தூக்கி விட்டுள்ளது கல்கி 2898 ஏ.டி...

புராணத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் கதை தான் கல்கி 2898 ஏ.டி...

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என உச்ச நட்சத்திரங்கள் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் குருஷேத்திரப் போர் முடிந்து 6000 ஆண்டுகள் கழித்து என்ன நடக்கிறது என்பதை அதிநவீன தொழில்நுட்பத்துடன் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்...

ப்ராஜெக்ட் கே எனத் துவங்கி கல்கி 2898 ஏ.டியாக மாறிய இத்திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரள வைக்கின்றன... சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது...

படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது... விமர்சனங்கள் கலவையாக இருந்தபோதிலும், பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடித்து பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி பாக்ஸ் ஆஃபீசில் கல்லா கட்டி வருகிறது...

படத்தின் வில்லனான கமல்ஹாசன் திரையில் தோன்றுவது வெகு சில நிமிடங்களே என்ற போதிலும், வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி படம் முழுக்க மனதில் நிற்கிறார்...

படத்தின் முதல் பாதியில் வெகு இயல்பாக இருக்கும் பிரபாஸ் 2ம் பாதியில் வெறித்தனமாக நடித்துள்ளார்... அதிலும் அமிதாப் பச்சனுடனான பிரபாஸின் சண்டைக் காட்சிகள் மிரள வைக்கின்றன... கடைசி முக்கால் மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் கட்டுப்போட்டு விட்டது...

பாகுபலிக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பான் இந்தியா ஹீரோவான பிரபாஸ் கல்கி 2898 ஏ.டி மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை...


Next Story

மேலும் செய்திகள்