யுவன் சங்கர் ராஜா கடும் எதிர்ப்பு | Yuvan Shankar Raja
காசாவைப் போல் லெபனானிலும் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா லெபனானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்... காசாவில் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவை அழிப்பதாக கூறி, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் இஸ்ரேலை 'ஆக்கிரமிப்பாளர்' எனக் குறிப்பிட்ட யுவன் சங்கர் ராஜா, தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். இதேபோல் காசா போர் தீவிரமடைந்த போதும் யுவன், காசாவுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story