இயக்குநர் ஷங்கரை கவிழ்க்க சதியா? உலக தரத்தில் ரெடியாக இருக்கும் மெகா தமிழ் மூவியை உடைக்க ப்ளானா?

x

இயக்குநர் ஷங்கரை கவிழ்க்க சதியா?

உலக தரத்தில் ரெடியாக இருக்கும்

மெகா தமிழ் மூவியை உடைக்க ப்ளானா?

கிசுகிசுக்கும் கோலிவுட் வட்டாரம்

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், வசூல் ரீதியாக சாதனை படைத்ததா ?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தை தன் பக்கம் வைத்திருந்தது..

28 வருடங்களுக்கு பின் வெளியாகும் 2ம் பாகம், இக்கால ரசிகர்களை ஈர்க்குமா...இந்தியன் தாத்தா மீண்டும் மிரட்டுவாரா என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 வெளியானது...

இந்தியன் 1 பாகத்தில் இருந்த மேஜிக்கை 2ம் பாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதை பலர் கருத்து தெரிவிக்க, கலவையான விமர்சனங்களே நீடித்து வந்தது...

திரைக்கதையில் சொதப்பியதாக பலர் கருத்து தெரிவித்து வந்தாலும், நடிகர் கமல்ஹாசனின் நடிப்புக்கு தலைவணங்குவதாகவே ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் இந்தியன் தாத்தாவின் மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது அவர்களின் ஆதங்கமாக உள்ளது..

படத்தில், இந்தியன் தாத்தா மிரட்டினாலும் மற்ற கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் மிஸ் ஆகிறது என்பதும் சிலரின் கருத்து..

குறிப்பாக, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ஜெகன், பிரியா பவானிசங்கர், சமுத்திரக்கனி, தம்பி ராமையா என பல நடிகர்கள் இருந்தும் அவர்களின் முக்கியத்துவம் தென்படவில்லை என்கின்றனர்..

இருப்பினும் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் நடிகர் விவேக்-ஐ படத்தில் இடம்பெறச் செய்ததற்கு தனியாக பாராட்டி வரும் நிலையில், நடிகர் விவேக்கிற்காக தானே நடித்ததாக கூறியுள்ளார் நடிகர் கோவை பாபு..

இந்தியன் 1ம் பாகத்தில் இருந்த மேஜிக், இந்தியன் 2ம் பாகத்தில் இல்லை எனக்கூறினாலும், தேவைக்கேற்ப அரசியல் பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை உள்ளூர் அரசியலை விட தேசிய அரசியல் படத்தில் அதிகம் எட்டிப்பார்த்ததை காண முடிந்தது..

இப்படி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நீளமான காட்சிகள் இருப்பது பின்னடைவாக கருதப்பட்டதால், படத்தில் சில காட்சிகளை குறுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு 2.40 நிமிடங்களுக்கு படம் குறுக்கப்பட்டுள்ளது..

அதே வேளையில், இயக்குநர் ஷங்கரின் மார்கெட்டை குறைக்க, இந்தியன் 2 படத்தை திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்களை முன் வைப்பதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

இந்தியன் 3ம் பாகம், வேள்பாரி கதை உள்ளிட்டவற்றை இயக்கவுள்ளதாக ஷங்கர் அப்டேட் கொடுத்துள்ளதால், அதனை முறியடிக்க போடப்பட்ட சதி என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது...

விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க, முதல் நாளில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது...

அத்துடன் இந்த வார முடிவில் 200 கோடி வசூலை தொடும் என படக்குழு எதிர்ப்பார்த்துள்ளது..

எதிர்மறையான விமர்சனங்களை கடந்தும், வசூலில் சமாளித்து வரும் இந்தியன் 2ம் பாகம் வசூலில் சாதித்து காட்டுமா என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர் திரை விமர்சகர்கள்...

மேலும் இந்தியன் 2 படத்தின் முடிவில் வெளியான 3ம் பாகத்தின் டிரைலர் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்