இந்தியன் 2 படத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த லோகேஷ்

x

இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியது... இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை விமர்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் படத்தை புகழ்ந்து வருகின்றனர்... அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இந்தியன் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசனுக்கும் இயக்குனர் சங்கருக்கும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்