அறிவியல், இலக்கியம், சினிமா, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று

x

அறிவியல், இலக்கியம், சினிமா, நாடகம் உள்ளிட்ட

பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த எழுத்தாளர்

சுஜாதா பிறந்த தினம் இன்று. அவரின் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.


1935-ல் சென்னையில் பிறந்த ரங்கராஜன் என்ற

இயற்பெயர் கொண்ட சுஜாதா, ஸ்ரீரங்கத்தில் பள்ளிப்

படிப்பை முடித்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும்,

பின்னர் சென்னை எம்.ஐ.டியிலும் எலக்ட்ரானிக்ஸ் பட்டம்

பெற்றார்.

சிவில் விமானப் போக்குவரத்து துறையில் பணியாற்றிய

போது, விமானம் ஓட்டக் கற்று கொண்டார். அந்த அனுபவம்

பற்றி சுவாரஸ்யமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். பின்னர்

பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸில் பணியாற்றியவர், 1993-ல் ஓய்வு பெற்றார்.

அவரின் மனைவி சுஜாதா பெயரில் கதைகள் மற்றும் நாவல்களை எழுதத் தொடங்கிய சுஜாதா, ஒரு கட்டத்தில் தமிழகத்தின் நம்பர் ஒன் எழுத்தாளராக மிளிர்ந்தார். ஒரே சமயத்தில் நான்கிற்கும் அதிக தொடர் கதைகளை எழுதி சாதனை படைத்தார்.

1970 மற்றும் 80 களில் காசளவில் ஒரு உலகம், சிலிக்கன் சில்லு புரட்சி, கம்யூட்டரின் கதை போன்ற தலைப்புகளில், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி எளிய தமிழில் எழுதி இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக வளம்வந்தார்.

கற்றதும் பெற்றதும்..., ஏன்? எதற்கு? எப்படி?... என்ற அவரது புத்தகங்கள் விற்பனையில் சக்கைபோடுபோட்டன.

பாரத் எலக்ட்ரானிக்ஸில் பணி புரிந்த போது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை உருவாக்கிய நிபுணர்கள் குழுவின் தலைவராக செயல்பட்டார். ஈ.வி.எம். இயந்திரம் வடிவமைக்கப்பட்டு முதன் முதலில் கேரளாவின் பரூர் என்னும் சிறிய நகரத்தில் பரிசோதித்து வென்றார்.

இது தொடர்பான வழக்கிற்காக சுஜாதா எல்லா கோர்ட்டுக்கும் போகவேண்டி வந்தது. தேர்தல் கமிஷன் இயந்திரத்தை ஏற்றது. அது குறித்து கருத்து தெரிவித்த

சுஜாதா, "இறுதியில் வென்றது காங்கிரசோ பி.ஜே.பி யோ அல்ல, டெக்னாலஜிதான் என்றார்.

அவரது கல்லூரி தோழரான விஞ்ஞானி அப்துல் கலாமுடன் சேர்ந்து, திப்பு சுல்தான் காலம் முதல் தற்போது வரை, இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த வரலாறு குறித்து எழுத திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த திட்டம் கடைசிவரை கைகூடாமல் போனது.

அவரின் நாவல்களில் ப்ரியா, காயத்ரி, விக்ரம், கரையெல்லாம்

செண்பகப்பூ போன்றவை திரைபடமாக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்