"பாலியல் புகார்.. நடிகர்களுக்கு நடிக்க தடை" - பரபரப்பில் கோலிவுட்

x

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டால் ஐந்து வருடங்களுக்கு திரைப்படங்களில் நடிக்க தடை என தென்னிந்திர நடிகர் சங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, பாலியல் குற்றம் புரிந்தால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் படத்தில் நடிப்பதற்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தனி தொலைபேசி எண், இ- மெயில் மூலம் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டி மூலம் புகார் அளிக்க வேண்டும் எனவும் நேரடியாக ஊடகங்களில் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்