மீண்டும் யூடியூபில் வெளியாகும் 'ஹேராம்'

x

கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படம் செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியாகிறது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று என பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டு வருகிறது. இதில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுதந்திர தினத்தையொட்டி இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்