படப்பிடிப்பு பாதிக்கு மேல் நிறைவு - இயக்குநர் திடீர் முடிவு

x

கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடி என்பது யாருக்கு பொருந்துமோ இல்லியோ.. பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்துவது நம்ம டிடிஎப் வாசனுக்கு தான்...

பைக் ஓட்டுனோமா? யூட்யூப்ல லைக்ஸ் அள்ளுனோமான்னு இல்லாம போற இடத்துல எல்லாம் வண்டி வண்டியா பேசி கடைசியில வண்டியே ஓட்டக்கூடாதுன்னு தடை போட்டது இவருக்கு தான்...

கொரோனா நேரத்துல கூட்டம் சேர்த்ததுல ஆரம்பிச்சு ஜிபி முத்துவை பைக் ரைட் கூட்டிட்டு போனது, அளவுக்கு அதிகமான ஸ்பீடுல வண்டி ஓட்டி சிக்குனது, போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்ததையே பந்தாவா பதிவு செஞ்சது என அத்தனையும் வாசனோட க்ரைம் ரேட்டை ஏத்திவிட்டுட்டு தான் இருந்துச்சு.

இந்த நிலையில தான் ஓவர் ஸ்பீடுல போய் விபத்துல வாசன் சிக்கவே, அதை காரணம் காட்டி அவரை இனிமேல் வண்டியே ஓட்டக்கூடாதுன்னு தடையும் போட்டாங்க.

இது ஒருபக்கம் இருக்க, திடீர்னு சினிமால ஹீரோ ஆகப்போறேன்னு என்ட்ரி கொடுத்தார் டிடிஎப் வாசன்.. கடலூரை சேர்ந்த செந்தில் செல் அம் இயக்கத்துல வாசனோட அறிமுக படம் என அதிர்ந்தது டிடிஎப் வட்டாரம்..

படப்பிடிப்பு பாதிக்கு மேல் நிறைவு - இயக்குநர் திடீர் முடிவு

பைக்ல வீலிங் செஞ்ச மாதிரி கையில சூலாயுதத்தோட மஞ்சள் வீரன் போஸ்டரே மாஸ் காட்டியது...

இதுக்கிடையில ஷூட்டிங்ல பிஸியா இருக்கேன், டைரக்டர் சொல்லி கெட்டப் மாத்தியிருக்கேன், அடுத்த படத்துல கமிட் ஆகி இருக்கேன் என பெரிய ஹீரோ போலவே பில்டப் கொடுத்தும் வந்தார் வாசன்..

இந்த சூழலில் தான் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசனை நீக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் செந்தில் செல் அம்...

படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட 35 சதவீதம் முடிஞ்சிருச்சாம். மற்ற கதாபாத்திரங்களை வச்சு ஷூட்டிங் பிஸியா இருந்த நேரத்துல தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கு...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா டிடிஎப் வாசன்?

படத்துல கமிட் ஆன வாசன் வெறுமனே போஸ்டருக்கு மட்டும் தான் போஸ் கொடுத்துருக்காரு போல. ஏன்னா வாசனை வச்சு இன்னும் ஒரு சதவீதம் கூட ஷூட்டிங்கே நடக்கலயாம்..

அதுவும் இல்லாம வாசனை ஷூட்டிங்கு வர வைக்குறதே பெரிய தலைவலியா இருந்ததாகவும் சொல்லப்படுது. பல வேலைகள்ல வாசன் பிஸியா இருந்ததால மஞ்சள் வீரனுக்கு நேரமே தர முடியலயாம்.. இதோ அதோன்னு வாசனை வச்சே படத்தை இழுத்து கொண்டு போக முடியாது என நினைச்ச டைரக்டர் வேற வழியில்லாம வாசனுக்கு டாட்டா காட்டி அனுப்பி வச்சிருக்காரு..

பொதுவாக சீரியல்கள்ல இவருக்கு பதில் இவர்னு அறிவிப்பு போடுவாங்க.. ஆனா படத்தோட போஸ்டர் மட்டும் வந்த நிலையில வாசனுக்கு பதிலாக வேற ஒரு ஹீரோவை தேர்வு செஞ்சு அதுக்கு பிறகு படத்தோட படப்பிடிப்பு தொடங்கும்னு இயக்குநர் செந்தில் செல் அம் சொல்லியிருக்காரு..

வாசனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா அவருக்கு ஷூட்டிங் வர்றதுக்கு நேரமே இல்லாததுதான் படத்தில் இருந்து நீக்க காரணம்னு இயக்குநர் சொல்லியிருந்தாலும் அறிமுகமான முதல் படத்துல இருந்தே வாசன் நீக்கப்பட்டது இணையத்தில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்