பலூன் தியேட்டரில் சினிமா.. தமிழகத்திலேயே முதல் முறையாக..! | Dharmapuri

x

தமிழகத்தில் முதன்முறையாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே நவீன பலூன் திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களிடம் கவனம் பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி கிராமத்தில், பூங்காவுடன் கூடிய குளிரூட்டப்பட்ட நவீன பலூன் திரையரங்கு நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக, ராட்சத பலூன் மற்றும் கன்டெய்னர் மூலம் ஒட்டுமொத்த திரையரங்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய திரையரங்க உரிமையாளர் ரமேஷ், நகரங்களில் உள்ளது போன்று நவீன அம்சங்களுடன் இந்த திரையரங்கம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 3 மணி நேரத்தில் இந்த திரையரங்கை வேறு இடத்திற்கு மாற்றலாம் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்