தனுஷ் விவகாரத்தை தொடர்ந்து.. மெகா செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம் - பரபரக்கும் கோலிவுட்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது. தனுஷ் நடிக்கும் படங்களை தயாரிப்பவர்கள், முதலில் தயாரிப்பாளர் சங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு படத்திற்கு அட்வான்ஸ் பெற்றால், அந்த பணியை முடித்த பின்னரே அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ரிலீஸ் தேதி கிடைக்காமல் பல படங்கள் தேங்கி இருப்பதால், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் புதிய படங்கள் தொடங்காது எனவும், தற்போது நடைபெறும் படப்பிடிப்புகளை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் முடித்து, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் பிரச்சினைகளை சரி செய்ய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.