"135 MLAக்கள், 16 MPக்கள் மீது பாலியல் வழக்கு" - கேரள CPI கட்சியின் மாநில செயலர் பரபரப்பு பேட்டி

x

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், கோவிந்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை எனவும், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் ஈடுபட்டதாக 135 எம்.எல்.ஏக்கள் மற்றும் 16 எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரும் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும் கூறினார். குறிப்பாக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டுக்கே முன்னுதாரணமான செயல் எனக் கூறினார். மேலும், மல்யுத்த வீரர்கள் புகாரின் மீது மத்திய அரசு என்ன செய்தது என்பதை எல்லோரும் அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்