"பூஜா கேத்கரை கைது செய்ய செப்.4 வரை தடை" - உயர்நீதிமன்றம்
மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய பூஜா கேத்கரை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. தேர்வில் ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுத்த யுபிஎஸ்சி, பூஜா கேத்கர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றது. இதனை தொடர்ந்து பூஜா கேத்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், டெல்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சி பதிலளிக்க கேட்டதோடு, பூஜா கேத்கரை ஆகஸ்ட் 21 வரையில் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இப்போது மீண்டும் விசாரிக்கப்பட்ட போது, இடைக்கால தடையை செப்டம்பர் 5 வரைக்கும் நீட்டித்துள்ளது
Next Story