"போஸ்டர் அடி; அண்ணன் ரெடி"... "தளபதியின் அரசியல் என்ட்ரி .." உண்மையை உடைத்த அர்ஜூன்
லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக நடிகர்கள் மன்சூர் அலிகான் மற்றும் அர்ஜூன் ஆகியோரின் பேச்சு அமைந்தது...
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய் தான் எனக் கூறினார். மேலும், பார்வையாளர்களை நோக்கி ரசிகர்களே நாளைய தீர்ப்பை எழுத தயாராக இருங்கள் எனக் கூறினார். இதே போன்று நடிகர் அர்ஜூன் பேசுகையில், விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார், அவரிடம் தலைவருக்கான பண்புகள் நிறைந்துள்ளது எனத் தெரிவித்தார். அர்ஜூனின் உரைக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
Next Story