வழக்கு வழக்கு வழக்கு.. கோர்ட் படி ஏறிய தமன்னா.. ஹை கோர்ட் போட்ட உத்தரவு | Tamanna

x

தமன்னா தொடர்ந்த வழக்கு - நகைக்கடை பதிலளிக்க உத்தரவு

நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்குமாறும், பிரபல நகைக்கடை நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நகைக்கடை நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக நடித்திருந்த நடிகை தமன்னா, ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் அந்த விளம்பரத்தை பயன்படுத்த தடைவிதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமன்னாவின் விளம்பரங்களை பயன்படுத்த தடைவிதித்து நகைக்கடை நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தடை உத்தரவை மீறி விளம்பரம் பயன்படுத்தப்படுவதாக கூறி, நகைக்கடை நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமன்னா தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நகைக்கடை நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல் பிரபல சோப் நிறுவனமும் ஒப்பந்தத்தை மீறி தனது விளம்பரங்களை பயன்படுத்துவதாகவும் தமன்னா மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் எதிர் மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், விசாரணை செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்