"கேப்டன் பிரபாகரன் பட ஷூட்டிங்கில் கோபம்.. மனமிறங்கி சாரி கேட்ட விஜயகாந்த்" - ஆர்.கே.செல்வமணி
"கேப்டன் பிரபாகரன் பட ஷூட்டிங்கில் கோபம்.. மனமிறங்கி சாரி கேட்ட விஜயகாந்த்" - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்திற்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, அவரது மனைவியும் ஆந்திர அமைச்சர் ரோஜா சென்றனர். அங்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, விஜயகாந்தை பின்பற்றியே, தனது தொகுதியில் கர்ப்பிணிகளுக்கு இலவச உணவு வழங்குவதாக கூறினார். அரசியலில் நடித்திருந்தால் விஜயகாந்த் வெற்றி பெற்றிருப்பார் என்ற ஆர்.கே.செல்வமணி, அவரது மறைவு அனைவருக்கும் பேரிழப்பு என்றார்.
Next Story