நாய்களுக்கு ரூ.45 கோடி... சொத்தை எழுதி வைத்த `நடன' சக்கரவர்த்தி... திகைப்பில் திரையுலகம்
1970களில் பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்தி, நாய்களுக்கென 45 கோடி ரூபாய் சொத்து எழுதி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்கள் மீது அதீத பிரியம் கொண்ட மிதுன் சக்கிரவர்த்தி, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை வைத்துள்ளார். இவைகளை பராமரிக்கவே சுமார் ஒன்றரை ஏக்கரில் பண்ணை ஒன்றை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், செல்லப்பிராணிகள் மீது மிதுன் சக்கரவர்த்தி கொண்ட அளவு கடந்த பாசம் குறித்து பேசிய அவரது மருமகள், அவர் நாய்களை பராமரிப்பதற்கென 45 கோடி ரூபாய் சொத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
Next Story