என் துரோணாச்சரியாருக்கு வாழ்த்துக்கள்.. சீனு ராமசாமி நெகிழ்ச்சி பதிவு

x

இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப் பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜவுக்கு இயக்குநர் சீனுராமசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சீனுராமசாமி, இந்த ஏகலைவனை சீடனாக ஏற்று, கட்டை விரலுக்கு மோதிர முத்தமிட்டு வாழ்த்திய குரு துரோணாச்சாரியே வாழ்க என்றும், ஆண்டிப்பட்டி சீனிச்சேவின் சொற்களால் வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்