ஆகஸ்ட் 15 - திரைக்கு வரவுள்ள 4 திரைப்படங்கள்

x

2024 துவங்கி 7 மாதங்கள் நிறைவடையப் போகும் நிலையில் எப்படியும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கும்...

ஆனால் வசூல் ரீதியாகவும் சரி...விமர்சன ரீதியாகவும் சரி...சொல்லிக் கொள்ளும்படி பெயர் எடுத்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்...

பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ படங்கள் கூட வசூலில் படுத்தே விட்டன...

அதே சமயம், மஞ்சும்மல் பாய்ஸ், குருவாயூர் அம்பலநடையில் போன்ற மலையாள படங்கள் கூட தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன..

இந்த சூழலில் தான் சுதந்திர தினத்தன்று ஒரே நாளில் 4 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன...

தொடர் விடுமுறையை பொதுமக்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று ஜாலியாக கொண்டாடுவார்கள் என்பதால் திட்டமிட்டு 4 படங்கள் திரைக்கு வருகின்றன..

அதிலும் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

படத்தின் ட்ரைலரும், மினுக்கி மினுக்கி பாடலும் இணையத்தைக் கலக்கின...படத்திற்கான கடின உழைப்பு காட்சிகளிலேயே தெரிந்தது...


90களில் ஜோடி படத்தில் ஜோடி போட்டு ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட பிரசாந்த் - சிம்ரன் ஜோடியை அந்தகன் படம் மூலம் மீண்டும் ஒன்றாய் கண்டதே ஆத்ம திருப்தி...

நீண்ட காலமாக இப்போது வரும் அப்போது வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட பிரசாந்தின் அந்தகன் திரைப்படம் ஒருவழியாக சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக வெளியாகிறது...


சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் ரகு தாத்தாவும் ஆகஸ்ட் 15 தான் ரிலீஸ் ஆகிறது...

டீசர் வெளியான போதே பெரிதும் பேசப்பட்டது ரகு தாத்தா... "இந்தி எக்சாம் எழுதுனாதா பிரமோஷன் கிடைக்கும்னா...அந்த பிரமோஷனே வேணாம்..." என்பது உள்ளிட்ட வசனங்கள் பெரிதும் ரசிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்...


திகில் திரைப்படப் பிரியர்கள் வெகுவாக கொண்டாடிய டிமான்ட்டி காலனி திரைப்படம் மிகக்குறைந்த பொருட்செலவில் உருவான போதும் வசூலைக் குவித்தது...

இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள "டிமான்ட்டி காலனி 2" திரைப்படமும் போட்டியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது...

நல்ல படங்களுக்காக காத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் ஏக்கத்தை சுதந்திர தின திரைப்படங்கள் தீர்த்து வைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்