நடிகை அனுஷ்காவுக்கு கன்னட தயாரிப்பாளருடன் திருமணம்? - திரையுலக வட்டாரங்களில் பரவும் தகவல்

x

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை, நடிகை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை அனுஷ்கா தமிழில், அருந்ததி, பாகுபலி ஆகிய படங்களின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். 42 வயதாகும் அனுஷ்காவுக்கு எப்போது திருமணம்? என்பதே, பல்வேறு பேட்டிகளில் அவரிடம் கேட்கப்படும் பிரதான கேள்வியாக இருந்தது. அவர் நடிகர் பிரபாஸ்-ஐ காதலிப்பதாக அடிக்கடி கிசுகிசுக்களும் வந்து கொண்டு இருந்தன. இந்நிலையில், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை நடிகை அனுஷ்கா, மணம் முடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நடிகை அனுஷ்கா தரப்பில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்