"கை கால் விழுந்திடுச்சி.." - பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ

x

ஆந்திராவை சேர்ந்த நடிகர் வெங்கல் ராவ், திரைப்படத் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக ஃபைட் மாஸ்டராக இருந்தவர். உடல் ஒத்துழைக்காத நிலையில், 'நீ மட்டும்' என்ற திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு சிறுநீரகக் கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நடிகர் வெங்கல் ராவ் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், நடிகர் வெங்கல் ராவ் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னால் நடக்கவோ, பேசவோ முடியவில்லை என்றும், மருந்து கூட வாங்க முடியாததால், நடிகர்கள் உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்