அல்லு அர்ஜுனை சீண்டிய பவன்? ஒற்றை பேட்டியில் வெடித்த பிரளயம் - குடும்பமே கொண்டாட தனியே நின்ற அல்லு
புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனை மறைமுகமாக விமர்சிப்பதைப் போல் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... என்ன நடந்தது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக அரியணை ஏறியுள்ளார்...
பவன் கல்யாணுக்கு மெகா குடும்பமே அமோக ஆதரவளித்திருந்தது...
ஆனால் அதே மெகா குடும்பத்தைச் சேர்ந்த அல்லு அர்ஜுனோ...ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷில்பா ரவி ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்து அவருடைய வீட்டிற்கெல்லாம் சென்றிருந்தார்...
இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
அதிலும் பவன் கல்யாண் பதவியேற்பு விழாவை
அல்லு அர்ஜுன் குடும்பம் புறக்கணித்ததும் பெரும் பேசுபொருளானது...
அரசியலில் தான் பிரச்சினை என்றால் சினிமாவிற்குள்ளும் இந்த பிரச்சினை புகுந்து விட்டது போலத் தெரிகிறது...
என்ன நடந்தது?..
புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களை சம்பாதித்த அல்லு அர்ஜுன் அனைவரையும் "புஷ்பராஜ்" புகழ் பாட வைத்தார்...
செம்மரக்கடத்தல் பின்னணியில் உருவான இப்படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து 2ம் பாகமும் வெற்றிகரமாக வெளியாகப் போகிறது...
இந்த சூழலில் தான் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வன அழிப்பு குறித்து பேசியுள்ளது... அல்லு அர்ஜுனை மறைமுகமாக சாடியுள்ளாரோ என்ற கேள்வியை எழுப்புகிறது...
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்றேவை சந்தித்து இரு மாநிலப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்...
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்கால சினிமா குறித்து மனம் திறந்தார்...
பவன் கல்யாண், ஆந்திர துணை முதல்வர்
"40 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் சினிமால ஹீரோவா வர்றவங்க காட்ட பாதுகாக்குறவுங்களாவும்...கொள்ளையர்கள்கிட்ட இருந்து காட்டோட வளங்கள காப்பாத்துறவுங்களாவும் தான் காட்டப்பட்டாங்க...ஆனா இப்போ அந்த கலாச்சாரம் அப்படியே மாறிடுச்சு...காட்ட அழிச்சு...கோடாரி புடிச்சு...காட்டோட வளங்கள கொள்ளையடிக்கிற நபர்களத்தான் ஹீரோவா காட்டுற காலகட்டம் வந்துருச்சு...சினிமா துறையைச் சேர்ந்தவன் அப்படிங்கிற அடிப்படைல...இது வேதனையா இருக்கு...இது மாதிரியான படங்கள நான் ஒத்துக்க மாட்டேன்...சினிமாவுல செய்ய முடியாதத நிஜ வாழ்க்கைல செய்யணும்னு விரும்புறேன்...அரசியல்ல இருக்குறதால அத செய்ய முழு முயற்சி எடுப்பேன்..."
இது பார்ப்பதற்கு பொதுவாக சினிமாவைப் பற்றி பேசுவது போல் தான் உள்ளது...
அதே சமயம் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனை சுட்டிக் காட்டுவதைப் போல் அமைந்துள்ளதையும் மறுக்க முடியவில்லை என்றும் சினிமா ஆர்வலர்கள் இணையத்தில் கமெண்டுகளை முன்வைத்துள்ளனர்..