நடிகர் வெங்கல் ராவ்-க்கு ஆதரவுக் கரம் நீட்டிய பிரபலங்கள்

x

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்-க்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சின்னத்திரை நடிகர் பாலா பண உதவி செய்துள்ளனர். வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வெங்கல்ராவ், தனக்கு உடல்நிலை சரியில்லை, மருந்து வாங்கக் கூட பணமில்லை எனக்கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ட நடிகர் சிம்பு, முதல் ஆளாக 2 லட்சம் ரூபாய் வழங்கி உதவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் சின்னத்திரை நடிகரான பாலா, தனது சார்பில் 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்து உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்