"சர்க்கரை தடவிய விபச்சார விடுதி" இந்திய சினிமா ஆணி வேரிலேயே பேரிடி...கொந்தளிக்கும் உச்ச நடிகை

x

சர்க்கரை தடவிய விபச்சார விடுதி"

இந்திய சினிமா ஆணி வேரிலேயே பேரிடி

முதல்முறையாக வாய் திறந்த உச்ச நடிகை

CM மம்தாவே எதிர்பாரா ஷாக்

நடுங்கி கிடக்கும் பிக் ஸ்டார்கள்

ஹேமா கமிட்டி அறிக்கையினால் மலையாள திரையுலகமே பதற்றத்தில் இருக்க..பெங்காலி திரைப்பட முன்னணி நடிகை ஒருவர் போர் கொடி தூக்கி இருக்கும் நிலையில் ....என்னதான் நடக்கிறது பெங்காலி திரையுலகத்தில்... பார்க்கலாம் விரிவாக...

இந்திய சினிமாவை உலக அளவில் எடுத்துச் சென்ற பெங்காலி மொழிப்படங்கள். இந்த மொழியில் சத்யஜித் ரே எடுத்த திரைப்படங்கள் தான் பின்னாளில் அவரை இந்திய சினிமாவின் பிதாமகன் என்ற அளவிற்கு கொண்டு சென்றது..

இத்தகைய பெருமை கொண்ட பெங்காலி சினிமாவை நடிகை ஒருவர் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருப்பது பெங்காலி சினிமா வட்டாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது...

"பெங்காலி சினிமா சர்க்கரை தடவிய விபச்சார விடுதி" ! என அந்த நடிகை சொன்ன வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யார் அந்த நடிகை...? எதற்காக அப்படி சொன்னார்?

பள்ளியில் படிக்கும் போதே 15 வயதில் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி. பல தொடர்களில் நடித்து புகழ் பெற்ற பின்னர் பெங்காலி சினிமாவிலும் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டினார்.

இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையினால் பற்றி எரிகிறது மலையாள சினிமா. இது தொடர்பாக தனது பேஸ்புக்கில் ஹேமா கமிட்டி அறிக்கை போன்று ஏன் பெங்காலி திரைப்படத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவு குறித்து கமிட்டி அமைக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினார் ரிதாபாரி சக்ரவர்த்தி.

பெங்காலி திரைப்படத்துறையிலும் நடிகர்களில் ஆரம்பித்து இயக்குநர்கள் வரை பலரும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் கொடுமைகளை செய்து வருவதாகவும், இதே போன்ற மோசமான அனுபவத்தைத் தானும் பெற்று இருப்பதாகக் கூற சர்ச்சை வெடித்து இருக்கிறது..

இதே போல் பாதிக்கப்பட்ட சக நடிகைகளும் முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்த ரிதாபாரி.... நாம் எதிர்க்கக்கூடிய நபர்கள் திரைத்துறையில் அதிகாரம் படைத்த நபர்கள்... அவர்களை எதிர்த்தால் நமது எதிர்காலம் கேள்விக்குறிதான்.. அதற்காக அவர்களின் முகத்திரையை கிழிக்காமல் இருக்கலாமா ? என்று கேள்வி எழுப்பினார்.

பெண்களைச் சதை பிண்டமாக நினைக்கக் கூடிய பெங்காலி திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் இன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டிருப்பதாக காட்டமாக விளாசி இருக்கிறார்...

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரை தனது சமூக வலைத்தளத்தில் டேக் செய்து இருக்கிறார்.

ஹேமா கமிட்டி அறிக்கையினை முன்னுதாரணமாகக் கொண்டு பெங்காலி திரைப்பட துறையில் களையெடுக்க வேண்டும் என பெங்காலி முன்னணி நடிகை போர் கொடியை தூக்கி இருக்கும் நிலையில் முதல்வரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்