சூர்யாவுக்கு அடுத்த தலைவலி.. 155 ரஷ்யர்களால் சுற்றும் சர்ச்சை.. எங்கே எப்படி இருக்கிறார்?
கடந்த ஆண்டு இறுதி...கங்குவா படப்பிடிப்பு...ரோப் கேமரா அறுந்து தோள்பட்டையில் மோதி படுகாயமடைந்த சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார்...
அதேபோல் இந்த ஆண்டு...சூர்யா 44 படப்பிடிப்பு...பரபரப்பான சண்டைக் காட்சியின் போது தலையில் படுகாயம்...சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா...
இதற்கு மத்தியில் அடுத்து ஒரு சர்ச்சை சூழ்ந்துள்ளது சூர்யாவை...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது...
கடந்த மாதம் அப்படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது...
ஊட்டி தனியார் பேலசில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில்...இதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த 155 துணை நடிகர்கள் கடந்த மாதம் 27ம் தேதி சுற்றுலா விசாவில் வந்ததாகத் தெரிகிறது...
அவர்கள் ஊட்டியில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து படக்குழு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கவில்லையாம்...
மும்முரமாக நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது விபத்து...
42 ரஷ்யர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்ற நிலையில்...115 பேர் உதகையில் உள்ளனர்...
சுற்றுலா விசாவில் வந்து விட்டு ரஷ்யர்கள் எப்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம்?...என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்...விளக்கம் அளிக்குமாறு நீலகிரி மாவட்ட தனிப் பிரிவு போலீஸார் ரஷ்யர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்...
அத்துடன் காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...