வரிசை கட்டி கிளம்பிய தமிழ் நடிகைகள்.. தமிழ் ஹீரோக்கள் ரியாக்ஷனால் பேரதிர்ச்சி - .ரசிகர்கள் ஷாக்
கோலிவுட்டில் வெடிக்கும் பாலியில் சர்ச்சை
வரிசை கட்டி கிளம்பிய தமிழ் நடிகைகள்
தமிழ் ஹீரோக்கள் ரியாக்ஷனால் பேரதிர்ச்சி
எதிர்பாரா டுவிஸ்ட்...ரசிகர்கள் ஷாக்
மலையாளத் திரையுலகை ஆட்டம் காண வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு, மழுப்பலான பதிலளித்து நழுவுகின்றனர் தமிழ் நடிகர்கள். என்ன நடக்கிறது கோலிவுட்டில் பார்க்கலாம் விரிவாக...
மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி பற்ற வைத்த நெருப்பு, கோலிவுட், டோலிவுட், பாலிவுட் வரை எதிரொலித்துள்ளது...
அந்த வகையில் நடிகர்கள் செல்லுமிடமெல்லாம், அவர்களை துரத்துகிறது ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான கேள்விகள்...
அதிலும், நடிகைகள் ஒவ்வொருவராக தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வர...இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் திரையுலகை சேர்ந்த நடிகர்களுக்கும் இக்கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு நடிகர்கள் கழுவுற மீனில் நழுவும் மீனைப் போலவே மழுப்பலான பதில் அளிக்கின்றனர்.
அந்த வகையில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து விஷால் பேசியதும், திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது..
இந்த சூழலில், தமிழ் திரைத்துறையின் முக்கிய நடிகரான ரஜினிகாந்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய சூழலில், அவரும் ஹேமா கமிட்டி குறித்து தெரியாது என மறுத்து விட்டார்...
மெய்யழகன் இசை வெளியீட்டு விழா நிகழ்வின் போது நடிகர் கார்த்தியிடமும் கேள்வி எழுப்ப பட, சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் பேச வேண்டாம் என ஆஃப் செய்து விட்டார்..
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்டதற்கு நன்றி, வணக்கம் என கூறி முடித்து விட்டார் நடிகர் தியாகராஜன்...
இவ்வளவு ஏன் எப்போதும் வைப்-ஆகவே இருக்கும் நடிகர் ஜீவா, ஹேமா கமிட்டி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது செய்தியாளரிடம் சீறியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...
இப்படி தமிழ்த்திரைத்துறை நடிகர்கள் இந்த விவகாரத்தை நிராகரித்து வரும் சூழலில், நடிகைகள் குரல் எழுப்பி வருகின்றனர்..
தமிழ்த்திரைத்துறையில் பாலியல் ரீதியான பிரச்சனைகள் இல்லை என செய்தியாளர்களிடம் நடிகர் ஜீவா கூறியதை சுட்டிக்காட்டி, தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை என எவ்வாறு கூறுகிறார்கள் என புரியவில்லை என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்...
நடிகை ராதிகா, குஷ்பூ, உள்ளிட்டோர் இவ்விவகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள சூழலில், இதுகுறித்து வெளிப்படையாக பேச கோலிவுட் நடிகர்கள் தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது...