தயாரிப்பாளர் சங்க அறிக்கைக்கு நடிகர் சங்கம் பதில்

x
  • சிக்கலுக்கான ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், வேலை நிறுத்தம் போன்ற அவசியமற்ற முடிவுகள், முட்டுக்கட்டையாகவே கருதப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடிகர் சங்கம் பதிலளித்துள்ளது.
  • இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னிச்சையான இந்த முடிவால் மிக பெரிய பாதிப்பிற்கு உள்ளாகப்போவது திரைப்பட துறை தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களும் தான் என கூறப்பட்டுள்ளது. சிக்கலுக்கான ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், வேலைநிறுத்தம் போன்ற அவசியமற்ற முடிவு, சிலரால் இடப்படும் முட்டுக்கடையாகவே கருதப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய செயல்பாட்டை நடிகர் சங்கம் ஒருபோதும் ஆதரிக்காது என்றும், இந்த சந்தர்ப்பத்திலும் திரைத்துறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் மட்டுமே, தொழிலாளர்கள் வாழ்வுரிமையை ஒடுக்கவும், வேலைகளை முடக்கவும் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்