"போதைப்பொருளை தூண்டும் விதத்தில் பாடல் வரிகள்"..நடிகர் விஜய்யின் விசில் போடு பாடலுக்கு எதிராக புகார்
ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைனில் அளித்த புகாரில், லியோ திரைப்படம் போன்றே, தற்போது Goat திரைப்படத்தில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய விசில் போடு பாடலின் வரிகள், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசில் போடு பாட்டை உடனடியாக சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படியும், மேலும் நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது...
Next Story