வெளியானது நடிகர் விஜய்யின் 69வது படத்தின் அப்டேட்

x

தி கோட் திரைப்படத்தின் கொண்டாட்ட களைப்பில் இருந்து விஜய் ரசிகர்கள் மீளும் முன்னரே 69வது படத்தின் அப்டேட்டை வெளியிடத் தொடங்கி விட்டது படக்குழு...

முதலில் படத்திற்கான அப்டேட் எனக்கூறி கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது..


அரசியலில் முழு வீச்சில் இறங்க ரெடியாக இருக்கும் விஜய்யின் கடைசி படம் இதுவே என கூறப்படுவதால், ஒன் லாஸ்ட் டைம் என்ற வாசகத்தை கண்டதும் உடைந்து போனது விஜய் ரசிகர்களின் மனம்...

இருப்பினும் கனத்த இதயத்துடன் அப்டேட்டுக்காக காத்திருந்தவர்களுக்கு, சற்று ஆறுதலாக வந்தது போஸ்டர்..

விஜய்யின் 69வது படத்தை எச். வினோத் இயக்குகிறார் என முன்பே அறிந்திருந்த ரசிகர்கள், படத்தின் டைட்டிலுக்காக காத்திருந்தனர்.

ஆனால் படத்தின் போஸ்டரில் டைட்டில் அல்லது விஜய்யின் கெட்-அப் குறித்தோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது ஏமாற்றம் தான்.

மாறாக அரசியல் ரீதியாக கவனம் பெறும் வாசகங்களே போஸ்டரில் தென்பட்டன. கையில் தீப்பந்தம் ஏந்துவது போல் அமைந்துள்ள புகைப்படத்தில் ஜனநாயகத்திற்கான தீப்பந்தத்தை ஏற்றுவதாக, The Torch Bearer of Democracy என்ற வரிகளுடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், கத்தி, சர்கார், போல இத்திரைப்படமும் அரசியலையே பிரதானமாக கொண்டு உருவாகப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது..

வழக்கம் போல கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ தொடர்ந்து இப்படத்தையும் இசையால் நிறைக்கிறாராம் அனிருத்..

இதை விட மிக மிக கவனம் பெறுவது படத்தின் ரிலீஸ் தேதி தான். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தீபாவளி ரிலீஸ் என ரசிகர்கள் சிலாகித்து கொண்டிருக்க...அங்கும் அரசியல் தான் என்கின்றனர் விமர்சகர்கள்..

2026 தேர்தலுக்கும் படத்தின் வெளியீட்டுக்கும் 6 மாத கால இடைவெளியே இருக்கும் பட்சத்தில், படத்தில் அரசியல் பேச்சுகளுக்கு பஞ்சமிருக்காது என்பதில் ஐயமில்லை...

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அடுத்த அப்டேட்டுக்கு காத்திருக்க தொடங்கி விட்டனர் விஜய் ரசிகர்கள்..


Next Story

மேலும் செய்திகள்