நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நடிகர் கவின்... இவர் தான் மணப்பெண்ணா..?
நடிகர் கவின் தனது நீண்டநாள் காதலியை இன்று கரம் பிடித்தார். தனியார் தொலைகாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் கவினுக்கும், அவரது காதலியான மோனிகாவுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ரசிகர்கள், கவின் - மோனிகா தம்பதிக்கு, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story