டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி
திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி இருந்ததாகவும், இது தவிர சிறுநீரக கோளாறும் ஏற்பட்ட நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வருகின்ற வெள்ளியன்று நடிகர் சிலம்பரசன் அவரை, சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story