முன்னாள் மனைவி மீது டி. இமான் புகார்

கடந்த 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் டி.இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
x
கடந்த 2018ம் ஆண்டு  கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் டி.இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க  குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அப்போது, இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்த நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் தொலைந்ததாக கூறி, மனைவி மோனிகா புதிய பாஸ்போர்ட் பெற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வு,  தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்