நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்முட்டி

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்த நடிகர் மம்முட்டி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
x
நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்த நடிகர் மம்முட்டி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். முதியவர்களுக்கு ஏற்படும் நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆராதிகா என்ற சிறுமி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்கு இன்று பிறந்த நாள் என்ற நிலையில் தனக்கு பிடித்த நடிகரான மம்முட்டி வந்து பார்ப்பாரா என கேள்வி எழுப்பி இருந்தார். சிறுமியின் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதை அடுத்து மம்முட்டியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த மம்முட்டி, சிறுமியின் ஆசைப்படி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்