ஆஸ்கர் விருது விழா - லாஸ் ஏஞ்சல்ஸில் முன்னேற்பாடுகள் தீவிரம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க யூனியன் ஸ்டேஷனில் விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு வழக்கமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் டால்பி திரையரங்கில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு இந்த விருது வழங்கும் விழா துவங்க உள்ள நிலையில், அதற்காக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரித்து அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக்கப் பட்டுள்ளன. அத்துடன், விருதில் கலந்து கொள்பவர்களுக்காக ஆடை வடிவமைப்பாளர்கள் அயராது உழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story