தேசிய அளவில் விவாதப்பொருளான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் சொல்வது என்ன?

THE KASHMIR FILES திரைப்படம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த படத்தில் உள்ள அம்சங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினரின் கூறியுள்ள கருத்துகள் பற்றி விரிவாக பார்ப்போம்...
தேசிய அளவில் விவாதப்பொருளான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் சொல்வது என்ன?
x
THE KASHMIR FILES திரைப்படம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த படத்தில் உள்ள அம்சங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினரின் கூறியுள்ள கருத்துகள் பற்றி விரிவாக பார்ப்போம்...

தற்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ள திரைப்படம் தான் THE KASHMIR FILES...

விவேக் அக்னிஹோர்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாத அச்சுறுத்தலால் இந்து பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறியதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வர, அன்றைய தினம் முதலே இணையத்தில் பேசுபொருளானது.

காஷ்மீர் பிரச்சனையை வைத்து மத வெறுப்பை விதைப்பதாக விமர்சனமும் எழுந்தது. 
ஆனால்,  படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி, "பேச்சு சுதந்திரம் பற்றி பேசுவோர், கடந்த சில நாட்களாக கடும் கோபத்தில் உள்ளதாகவும், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் புகழ்வதற்குப் பதிலாக இழிவுபடுத்தி வருவதாகவும் பாஜக எம்.பி கூட்டத்தில் பேசினார்.

இதோடு, ஹரியானா, குஜராத், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த படத்திற்கு வரி விலக்கு அறிவித்தன.

பாலிவுட் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், சுனில் செட்டி, மனோஜ் பாஜ்பய், வித்யூத் ஜமால், பிரனீதி சோப்ரா போன்றவர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இருப்பினும் பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு திருப்தி இல்லை.

தி காஷ்மீர் பைல்ஸ் படம் பல கட்டுக்கதைகளை தகர்த்துள்ள சூழலில், படம் குறித்து இந்தி திரையுலகினர் அமைதியை கடைப்பிடிப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். அமைதி காப்பதாக அவர் சாடுவது பாலிவுட்டின் முடி சூடா மன்னர்களான "கான்"களை தானா என்ற விவாதத்தை அது ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், 1990 முதல் 2007 வரை காஷ்மீரில் இந்துக்களை விட இஸ்லாமியர்களே அதிகம் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சித்து கேரள காங்கிரஸ் டிவிட்டரில் கருத்து பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சை பெரிதான உடனே இந்த பதிவை நீக்கிய கேரள காங்கிரஸ், காஷ்மீர் பண்டிதர்கள் மீதான ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டி பாஜக வெறுப்பு பிரசாரம் செய்வதாகவும், தீவிரவாதத்திற்கு எப்படி மதமில்லையோ, அதேபோல பாதிக்கப்பட்டவர்களையும் நாங்கள் மதம் சார்ந்து பார்ப்பதில்லை என கூறியுள்ளது.

இப்படி, அரசியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தேசிய அளவில் புயலை கிளப்பி இருக்கும் இந்த படம், பாக்ஸ் ஆபீசிலும் சாதிக்குமா என ஏங்கி கிடக்கிறது பாலிவுட்.


Next Story

மேலும் செய்திகள்