ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இளையராஜா - ரசிகர்கள் உற்சாகம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை இசைஞானி இளையராஜா ஏற்றுக்கொண்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை இசைஞானி இளையராஜா ஏற்றுக்கொண்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாய் எக்ஸ்போ இசைக் கச்சேரிக்காக துபாய் சென்றுள்ள இளையராஜா அங்குள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று பார்வையிட்டார். அது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், எங்கள் ஸ்டூடியோவிற்காக இளையராஜா இசையமைப்பார் என்று நம்புவதாக பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், விரைவில் இசையமைப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்